மான்குட்டியே...
UPDATED : செப் 20, 2024 | ADDED : செப் 20, 2024
வனத்துறை அதிகாரி டேனியல் ரோந்து சென்ற போது, வேலியில் சிக்கிய மான் ஒன்றைக் கண்டார். அதை வீட்டுக்கு எடுத்து வந்து மருந்து, உணவு கொடுத்து குணப்படுத்தினார். இரண்டு வாரங்கள் கழித்து மானைக் காட்டிற்குள் அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டு வளாகத்தின் முன் மான்கள் கூட்டமாக நின்றன. அவரால் குணப்படுத்தப்பட்ட மான் குட்டி, மண்டியிட்டு நன்றியை வெளிப்படுத்தியது. மனிதர்களிடம் இருக்க வேண்டிய நன்றி உணர்வு விலங்கிடம் இருப்பது ஆச்சரியத்தின் உச்சம். எல்லா உயிரும் அன்பிற்காக ஏங்குகிறது என்பது உண்மை தானே.