உண்மை வீரன்
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க நிபுணர் ஒருவரை வரவழைத்தார் மன்னர்.'எந்தளவுக்கு பயிற்சி பெற்றுள்ளீர்களோ, அதை பொறுத்து பயிற்சி தர முடியும்' என்றார்.'எனக்கு எதுவும் தெரியாது' என்றார் தளபதி. அவரை ஏற இறங்க பார்த்ததுடன், வீரர்கள் பக்கம் திரும்பினார். அவர்களும் ஒரே போடாக 'எதுவும் தெரியாது' என்றே பதிலளித்தனர். அதைக் கேட்ட நிபுணர், 'உங்களுக்கு என்ன தான் தெரியும்' எனக் கேட்டார். 'நாங்கள் உயிருக்கு பயப்படுவதில்லை' என்றனர். நிபுணரின் கண்கள் விரிந்தன. 'உயிருக்கு அஞ்சாதவனே உண்மை வீரன்' என்று சொல்லி பயிற்சி தரத் தொடங்கினார்.