உள்ளூர் செய்திகள்

காத்திரு

சிறுவனுக்கு சாப்பிட பலாச்சுளை கொடுத்தார் பெரியவர் ஒருவர். ஆசையோடு சாப்பிட்ட அவனிடம், 'பலாக் கொட்டையை முளைக்க வை. அது மரமாகி சுவையான பழங்களை தரும்' என்றார் பெரியவர். வீட்டின் கொல்லையில் அதை புதைத்து வைத்தான் சிறுவன். இரண்டு நாளுக்கு ஒருமுறை மண்ணை தோண்டி எடுத்து முளைத்து விட்டதா... என பார்த்து விட்டு மீண்டும் புதைத்தான். சிறுவனைப் போலவே செயலைத் தொடங்கியதும் பலன் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அது அறியாமை. எதற்கும் ஒரு காலம் உண்டு; அதுவரை காத்திருப்பது கட்டாயம்.