உள்ளூர் செய்திகள்

நல்லவர்

காலில் தைத்த முள்ளை கையால் அகற்றுவது போல உங்கள் மீது அவதுாறு பரப்பியவர்களை கொண்டே நீங்கள் 'நல்லவர்' என சொல்ல வையுங்கள். இந்த உலகம் தேடுவது நல்லவனை மட்டுமல்ல; வல்லவனையும் தான். அதனால் நல்லவனாக இருப்பதோடு வல்லவனாகவும் இருங்கள். சூது, வாது, வஞ்சனை நிறைந்த மனிதர்கள் மத்தியில் வாழ நல்லவனாக இருந்தால் போதாது. வல்லவன் என்ற கவசமும் வேண்டும். உன் கடமையைச் செய்; நான் பக்கபலமாக இருக்கிறேன்.