நட்பை மறவாதே
UPDATED : நவ 28, 2024 | ADDED : நவ 28, 2024
தேர்வு எழுத இருக்கும் தன் மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல விரும்பினார் ஆசிரியர் அந்தோணி. அதற்காக டீ பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் வெவ்வேறு வடிவக் கோப்பைகளில் டீ தரப்பட்டது. அதை வாங்கிய மாணவர்கள் குடிக்க மனமின்றி ஒருவரை ஒருவர் இறுக்கமுடன் பார்த்துக் கொண்டனர். அப்போது ஆசிரியர், 'இந்த கோப்பைகள் போலத் தான் நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வெவ்வேறு சூழல்களில் வாழலாம். ஆனால் அதிலுள்ள தேநீரின் சுவை போல உங்களின் நட்பு மாறக் கூடாது' என்றார்.