உள்ளூர் செய்திகள்

முன்னேறு மேலே...

உழைப்பால் உயர்ந்தவர் கோடீஸ்வரரான ஜோசப், ''அனைவரும் மதிக்கும்படி பணமும், புகழும் எப்படி வந்தது'' என அவரிடம் கேட்ட போது 'ஏழையாக பிறந்தாலும் ஓய்வின்றி உழைக்கிறேன். குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர், நண்பர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்'' என்றார். 'நீங்கள் தான் முன்னேறி விட்டீர்களே... இனி உழைக்கத் தேவையில்லையே...' எனக் கேட்டதற்கு சிரித்தபடி, 'முன்னேறு மேலே... மேலே... என்பது என் இலக்கு. அதற்காக உயிருள்ள வரை உழைப்பேன்'' என்றார்.