காலம் தாழ்த்தாதே
UPDATED : ஜன 16, 2025 | ADDED : ஜன 16, 2025
பழுதாகி விடக் கூடாது எனக் கருதி கப்பலை கடலுக்குள் மாலுமி செலுத்தாமல் இருந்தால் என்னாகும்? துறைமுகத்திலேயே பயணிகள் காத்திருக்க வேண்டியது தான். முயற்சியில் இல்லாமல் இலக்கை யாரும் அடைய முடியாது. அலை ஓய்ந்தால் தான் கடலில் குளிப்பேன் என காத்திருந்தானாம் ஒருவன். அது போலத் தான் இதுவும். எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே செயலில் இறங்குவேன் என காலம் தாழ்த்துவது சரியல்ல. நற்செயல்களை இப்போதே செய்யுங்கள். குறை, தடை ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்து செயல்பட்டால்தான் முன்னேற முடியும் என்கிறார் அமெரிக்க அறிஞர் காப்மேயர்.