நன்றி மறந்தவர்கள்
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
ஆண்டவர் ஒருமுறை இரண்டு தேவ துாதர்களை அழைத்தார். ''இன்று காலை முதல் மாலை வரை மக்களை சந்தியுங்கள்'' என சொல்லி இரண்டு கூடைகள் கொடுத்தார். முதல் கூடையில் 'மன்றாடுதல்' என்றும், இரண்டாவது கூடையில் 'நன்றி' என்றும் எழுதப்பட்டிருந்தது. முதல் கூடையில் விருப்ப விண்ணப்பத்தையும், இரண்டாவது கூடையில் நன்றி சொல்லும் கடிதங்களையும் பெறுங்கள் என்றார். துாதர்களும் அதன்படி சேகரித்தனர். முதல் கூடை நிரம்பி வழிந்தது. இரண்டாவது கூடையோ நிரம்பவில்லை. நன்றி மறந்தவர்களாக மனிதர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.