நாகரிகம்
UPDATED : பிப் 20, 2025 | ADDED : பிப் 20, 2025
வியாபாரி ஒருவருக்குப் பணக்கஷ்டம். வழக்கமாக கடன் வாங்கும் பண்ணையாரிடம் சென்றார். அப்போது பண்ணையார் அவரது உதவியாளருடன் பேசிக் கொண்டிருந்தார். பண்ணையார்: கையிருப்பு என்ன உள்ளது? உதவியாளர்: பத்தாயிரத்து நுாறு ரூபாய் பண்ணையார்: வரவு சரியாக இல்லையா? உதவியாளர்: மாதக்கடைசி என்பதால் வரவு மந்தமாக உள்ளது. தனக்கு வேண்டிய தொகை இருபதாயிரம் என்பதால் வியாபாரி கடன் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 'இந்த பக்கம் வந்ததால் உங்களைச் சந்தித்தேன்' எனச் சொல்லி விட்டு வேறொருவரிடம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தார். சூழல் அறிந்து செயல்படுவதே நாகரிகம் என்கிறது பைபிள்.