பொறுமையே ஆயுதம்
UPDATED : ஏப் 03, 2025 | ADDED : ஏப் 03, 2025
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் கம்யூனிசம் தலை துாக்கி இருந்த காலம் அது. கிறிஸ்தவர்கள் அப்போது கடும் சித்ரவதையை அனுபவித்தனர். கிறிஸ்தவ சபைகளின் செயல்கள் முடங்கின. இந்த சூழலில் போதகர் ரிச்சர்ட் உம்பிராண்ட் என்பவர் ரகசிய ஆலயம் ஒன்றை உருவாக்க அரசு சிறையில் அடைத்தது. அங்கு அவரது மூளையை மழுங்கடிக்க பல உத்திகளை அதிகாரிகள் கையாண்டனர். பொறுமை என்னும் ஆயுதத்தால் கொடுமைகளை தாங்கினார். பல ஆண்டுகளுக்குப் பின் விடுதலை அடைந்ததும் ஊழியத்தில் ஈடுபட்டார்.