குறைகளை மாற்றுங்கள்
UPDATED : செப் 05, 2025 | ADDED : செப் 05, 2025
பிறர் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலில் மற்றவரை உயர்வாக நாம் நினைத்தால் தான் மற்றவர்களும் நம்மை கவுரவமாக நடத்துவர். ஆனால் நடைமுறையில் இது நடப்பதில்லை. பெரும்பாலானவர்கள் விமர்சனம் என்ற பெயரில் மற்றவரை காயப்படுத்துகின்றனர். அதே சமயம் காழ்ப்புணர்வுடன் ஒருவர் சொல்லும் விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை. தகுதியான விமர்சனம் குறைகளை சீர்படுத்த உதவும். குறைகளை நிறைகளாக மாற்றுங்கள்.