உயர்த்தியது எது
UPDATED : செப் 19, 2025 | ADDED : செப் 19, 2025
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை சந்திக்க ராணுவ தளபதிகள் அதிகாலையில் வந்தனர். அப்போது அவர் யாருடனோ பேசுவது போலிருந்தது. அது பற்றி விசாரித்த போது, ''நான் சிறுவயதில் மரம் வெட்டியாக இருந்தேன். அப்போது, 'தினமும் அதிகாலையில் ஆண்டவருடன் ஆலோசிக்காமல் யாரிடமும் பேசாதே' என என் பாட்டி அறிவுரை கூறினார். அன்று முதல் காலையில் எழுந்ததும் முதலில் வழிபாடு செய்வேன். இதுதான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியது'' என்றார்.