பணத்திற்காக அலையாதீர்
UPDATED : செப் 19, 2025 | ADDED : செப் 19, 2025
பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை என அனைவரும் கண்ணை மூடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சட்டத்தை மீறி நடக்கவும் துணிந்து விட்டனர். தனிமனிதன், சமுதாய ஒழுக்கம் இதனால் பாதிக்கப்படுகிறது. வாழ்வின் இறுதிக்காலத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடன் வரப் போவது எதுவும் கிடையாது. சந்ததிக்காக செல்வம் சேர்க்கிறோம் என்றாலும் பணம் யாருடனும் வரப் போவதில்லை. பணம் ஓரிடத்தில் நிலைத்திருக்காது. அதனால் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு எப்படி உதவலாம் என்பதிலும் ஆர்வம் செலுத்துங்கள்.