நல்ல நாள்
UPDATED : அக் 07, 2025 | ADDED : அக் 07, 2025
மனித வாழ்வு நிலை இல்லாதது; நிகழ்காலத்தில் வாழுங்கள் என்கிறார் அமெரிக்க தத்துவஞானி மெர்சன். மேலும் அவர் சொல்வதை கேளுங்கள். நேற்றை பற்றிய கவலை இல்லாமல், நாளைக்காக காத்திருக்காமல் 'இன்று தான் நல்ல நாள்' என இதயத்தில் எழுதுங்கள்.ஒவ்வொரு நிமிடமும் ஒழுக்கமாக வாழுங்கள். எண்ணம், சொல், செயலால் தினமும் உயருங்கள். ஒரு செயல் முடிந்த பிறகு இப்படி செய்திருக்கலாமே, அப்படி செய்திருக்கலாமே என மனதை அலைக்கழிக்காதீர்கள். பிரச்னை வரும் போது 'வாழ்வா... சாவா' என புலம்பாமல் அதை எதிர் கொள்ளுங்கள். மனதைக் காயப்படுத்திய சம்பவங்களை மறந்து விடுங்கள். தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். அழகான விஷயங்களை தேடவும், ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கவும் செய்யுங்கள்'' என்கிறார்.