மக்களின் அரசியல்வாதி
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் ஹாக். அவர் இறக்கும் சமயத்தில், 'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் வேண்டாம். என் கல்லறையின் அருகில் பழ மரங்களை நடுங்கள். அதில் கிடைக்கும் விதைகள், கன்றுகளை மக்களுக்கு இலவசமாக கொடுங்கள். அந்த வருமானத்தில் அவர்கள் வளமாக வாழட்டும்' என்றார். அப்படியே பலரும் செய்தனர். 1926 முதல் இப்போது வரை அந்த பணி தொடர்கிறது. என்ன அருமையான யோசனை... தன் நினைவையும் தக்க வைத்து, நாட்டு மக்களையும் வளமாக வாழச் செய்தவர் கவர்னர் ஹாக். இவரல்லவோ மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதி. இதை அரசியல்வாதிகள் பின்பற்றுவார்களா...