நர்ஸ் போல இரு
UPDATED : நவ 06, 2025 | ADDED : நவ 06, 2025
தொண்டு செய்வது என்பது மனிதனுக்கு கிடைத்த வரம். விருப்பு, வெறுப்பின்றி அதைச் செய்ய வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நர்ஸ்.அன்றாடம் தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் சலிப்பின்றி அன்போடும் கடமை உணர்வோடும் நோயாளிகளை தாய் போல கவனிப்பர். பணி நேரம் முடிந்ததும் ரிப்போர்ட்டை மருத்துவரிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்புவர். நோயாளி குணமடைந்து வீட்டுக்குச் செல்லும் போது உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அடுத்து வரும் நோயாளிக்கு பணியாற்ற காத்திருப்பர். ஒருவருக்கு நோய் முற்றினாலோ, அவர் இறக்க நேரிட்டாலோ வருத்தப்படுவர். ஆனால் அதிலேயே மூழ்காமல் பணியைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். நோயாளிக்கு சேவை செய்யும் நர்ஸ் போல மக்களுக்கு தொண்டு செய்பவர் இருக்க வேண்டும் என்கிறது உளவியல்.