உள்ளூர் செய்திகள்

சிரேஷ்டனாய் இரு

பல மனிதர்கள் தாம் நன்றாக வாழ்வதற்கு விடாமுயற்சியே காரணம் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் பெற்றோரின் தியாகத்தை மறந்து விட்டார்கள். சிறுவயதில் பாலுாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் அவர்களே. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான பாதையில் நம்மை பயணிக்கச் செய்தவர்கள் அவர்களே. முன்னேற்றத்தின் முழுபங்கினையும் அவர்களுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். 'உன் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதில் சிரேஷ்டனாய் இரு'.