உள்ளூர் செய்திகள்

வெற்றியின் ரகசியம்

நெசவு தொழில் செய்யும் ஒரு தம்பதியின் மகன் இரண்டாண்டு படிப்புக்காக வெளிநாடு சென்றான். ஆனால் படிப்பை பாதியில் விட்டு வீடு திரும்பினான். அவனை பார்த்த தந்தையார் நெய்து கொண்டிருந்த துணிகளை வேண்டுமென்ற கத்தரிக்கோலால் வெட்டினார். மீண்டும் அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆனது. அதை உன்னிப்பாக கவனித்த அவன் தன் தந்தையாரின் காலில் விழுந்தான். ''என்னை மன்னியுங்கள். தொடர்ந்து படிக்க வெளிநாடு செல்கிறேன்'' என்றான். எந்த செயலையும் முழுமையாக செய்து பழகுங்கள். வெற்றியின் ரகசியம் இது என்பதை உணர்வீர்கள்.