யாருக்கு கதவு திறக்கும்
UPDATED : பிப் 23, 2024 | ADDED : பிப் 23, 2024
லட்சாதிபதி, கோடீஸ்வரர் என்று பெயர் கொண்டவர்கள் மற்றவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் உழைத்து வாழும் விவசாயிகள் அவர்கள் அறியாமலேயே தானம் செய்து அதற்கான பலனைப் பெறுகிறார்கள் தெரியுமா... எப்படி... ஒருவர் நெல் விதைக்கிறார். மற்றொருவர் காய்கறிகளை பயிரிடுகிறார். அவை வளர்ந்து அறுவடை வரையிலும் எத்தனையோ புழு, பூச்சிகள், பறவைகள் அங்கு வந்து அதன் பசியாறுகின்றன. தெரிந்தும் தெரியாமலும் விவசாயி பலதரப்பட்ட உயிர்களின் பசியை போக்கியுள்ளார். தெரியாமல் செய்த தானத்திற்கு பலன் அதிகம். மற்றவர்களின் பசியைப் போக்குபவனுக்கு தேவலோக வாசல் கதவு திறந்திருக்கும் என்கிறது தேவமொழி.