உள்ளூர் செய்திகள்

வெற்றி தேடி வர...

வயல்வெளியில் விளைந்த நெற்கதிர்களை பாருங்கள். முற்றிய பயிர்கள் தலை கவிழ்ந்து கிடக்கும். அதிலிருந்து ஒரு நெல்மணி கூட உதிராது. ஆனால் களையாக வளர்ந்த புற்கள் ஆணவத்துடன் நிமிர்ந்து நிற்கும். நிறை குடம் தளும்பாது. குறை குடம் கூத்தாடும் என்பார்கள். அற்ப புத்தியுடையவர்கள் எல்லாம் தெரிந்தது போல ஆணவமாக செயல்படுவர். உண்மையை உணர்ந்த கல்வியாளர்கள் பணிவாக நடப்பர். படித்தவர், படிக்காதவர் என அனைவரும் பணிவுடன் நடந்தால் வெற்றி அவர்களைத் தேடி வரும்.