அவரவர் கையில்...
UPDATED : மே 03, 2024 | ADDED : மே 03, 2024
விடாமுயற்சி, கடின உழைப்பு, மனவலிமை கொண்டவர்கள் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். இந்த பண்பு இல்லாதவர்கள் உயர முடியாது. பணம், பதவி, செல்வாக்கை அடையத் துடிக்கின்றனர் சிலர். ஆனால் எதையும் தியாகம் செய்யவோ, துன்பத்தை எதிர்கொள்ளவோ அவர்கள் விரும்புவதில்லை. பொறுப்பைத் தட்டிக் கழித்தல், சிறுசெயலைக் கூட மலையாக கருதுதல் என எதிர்மறை குணம் கொண்டவர்கள் பட்டம், பதவி பெற்றாலும் தக்க வைக்க முடியாமல் போராடுவர். பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் கையில் தான் உள்ளது.