உள்ளூர் செய்திகள்

30 நாள் போதும்

எதிர்மறை சிந்தனை அதிகமாக உள்ளதா... தினமும் இரவில் துாங்கும் முன் இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள். பிரச்னை தீரும். தினமும் நீங்கள் செய்த நல்லது, கெட்ட செயல்களை வரிசைப்படுத்துங்கள். முதல் நாளில் நற்செயல் ஒன்றும் இருக்காது. ஆனால் நற்செயலை எழுத வேண்டும் என்பதற்காக நீங்கள் நற்செயலில் ஈடுபடுவீர்கள். அதுவே போக போக உங்களை நல்லவராக மாற்றும். தாங்கள் எழுதியதை தினமும் படியுங்கள். 30 நாளில் உங்களை நீங்கள் நல்லவர் என உணர்வீர்கள்.