குடிப்பதில் போட்டி
UPDATED : ஜூன் 07, 2024 | ADDED : ஜூன் 07, 2024
புலி ஒன்று நீர் பருக குளத்திற்குச் சென்றது. அதே நேரத்தில் சிங்கமும் வந்தது. 'நான் தான் முதலில் குடிப்பேன்' எனக் கர்ஜித்தது சிங்கம். அங்கு மரக்கிளையில் அமர்ந்திருந்த கழுகும், காகமும் ஆர்வமுடன் அவர்களை பார்த்தன. மரத்தடியில் நின்ற நரியும் 'இன்று நமக்கு வேட்டை தான்' என சந்தோஷப்பட்டது. அனைவரையும் நோட்டமிட்டதும், 'கழுகு, காகம், நரி எனப் பலரும் நம் சண்டையில் குளிர்காய நினைக்கிறார்கள். இருவரும் ஒற்றுமையாக குடிப்போம்' என்றது சிங்கம். அண்டை வீட்டாரிடம் சண்டை போடாதீர்கள். அது ஆண்டவரை எரிச்சல்படுத்தும்.