உள்ளூர் செய்திகள்

தாங்கும் கைகள்

பள்ளத்தில் தவறி விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே அவருக்கு வேதனை. ஆனால் பாவமாகிய பள்ளத்தில் விழுந்தால் வாழ்வே புதிராகி விடும். தவறு செய்தவர்கள் மற்றவர்களின் முன் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளலாம். ஆனால் மனசாட்சியிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. இதில் இருந்து தப்பிக்க ஒழுக்கம் ஒன்றே வழி. ஒழுக்கத்தில் இருந்து விலகாதபடி நம்மை காப்பவர் ஆண்டவர் ஒருவரே. அவரது கைகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கின்றன.