உள்ளூர் செய்திகள்

கொடுத்தது போகாது

  வழக்கமாக வரும் பிச்சைக்காரருக்கு உணவு கொடுத்தான் ஆரோக்கியம். அவனிடம், 'இருப்பது போகாது' என சொல்லிச் சென்றார். அதைக் கேட்ட அவன் புரியாமல் விழித்தான். தினமும் உணவு கொடுப்பான். ஒருநாள் வெளியூரில் இருந்து வந்த அவனது தந்தை வழியில் தடுமாறி விழுந்தார். அதைப் பார்த்த பிச்சைக்காரர் அவர் யார் என்று தெரியாமலேயே உதவி செய்தார். அன்றும் பிச்சைக்காரர் வர, அவனது தந்தை இவர் தான் எனக்கு உதவி செய்தார் என்றார். 'கொடுத்தது போகாது' என்ற சொல்லுக்கு விளக்கம் புரிந்தது.ஒருவருக்கு உதவினால் அந்த உதவி மற்றொருவர் வடிவில் நமக்கே கிடைக்கும்.