போனால் திரும்பாது
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
நேரம் நன்றாக இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும். மாடியில் இருந்து விழுந்து பிழைத்தவன் இருக்கிறான். புல் தடுக்கி இறந்தவனும் இருக்கிறான். இதுவெல்லாம் எப்படி நடக்கிறது எனக் கேட்டால் அவரவருக்குரிய அதிஷ்ட நேரம் என்பார்கள். அந்த நேரம் நம் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடுகிறது பாருங்கள். காத்திருந்தால் - மெதுவாக நகரும். தாமதித்தால் - கோபம் கொப்பளிக்கும். சோகத்தில் - நகரவே நகராது. மகிழ்ச்சியில் - கலகலப்பாக ஓடும். சலிப்பில் - ஜவ்வாக இழுக்கும். துன்பத்தில் - மனம் தத்தளிக்கும். நேரம் என்பது பொதுவானது. ஆனால் அதில் கிடைக்கும் அனுபவமோ மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. மொத்தத்தில் நேரம் கடந்து போகுமே தவிர திரும்ப வராது.