உண்மையாக இருங்கள்
UPDATED : ஜன 31, 2023 | ADDED : ஜன 31, 2023
இன்று பலரும் யாருக்கும் உண்மையாக இருப்பது இல்லை. இப்படி போலித்தனமாய் இருப்பவர்களை ஆண்டவர் விரும்புவதில்லை. பொய் பேசுபவர்கள், தீய எண்ணம் கொண்டவர்களை அவர் வெறுக்கிறார். செருக்கு கொண்டவர்களை எதிர்க்கிறார். பணிவுடன் இருப்பவர்களை அரவணைக்கிறார். எப்போதும் உண்மையாக இருந்தால் நற்பலனை பெறலாம். 'நீ மரண பரியந்தம் (இறக்கும் வரை) உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை (வாழ்வின் உயரிய பொருள்) உனக்கு தருவேன்' என்கிறது பைபிள்.