நன்மை செய்யுங்கள்
UPDATED : ஜூலை 12, 2022 | ADDED : ஜூலை 12, 2022
மகிழ்ச்சியாக வாழ நாம் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் அது சாத்தியமாகிறதா... இல்லை. சிலருக்கு அது அமைகிறது. பலரும் கவலைகளை மறக்க சிரிக்கின்றனர். இப்படி இருந்தால் மனஅழுத்தமும் வராது. ஆனால் இது தற்காலிக தீர்வைத்தான் கொடுக்கும். சரி இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன?பிறருக்கு நன்மை செய்தாலே போதும். நன்மையும், மகிழ்ச்சியும் நெருங்கிய தொடர்புடையவை. ஆகையால் நன்மை செய்வீர்.