யாரிடமும் சொல்லாதீர்
UPDATED : செப் 23, 2022 | ADDED : செப் 23, 2022
மரங்கள் ருசியான கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உப்பு உணவோடு கலந்து ருசியைத் தருகிறது. மெழுகுவர்த்தி ஒளி தருகிறது. இவையெல்லாம் தங்களையே தியாகம் செய்து மக்களுக்கு உதவுகின்றன. ஆனால் சேவையை வெளிக் காட்டுவதில்லை. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஆரவாரமின்றி தர்மம் செய்ய வேண்டும். அதாவது செய்த தர்மத்தை யாரிடமும் சொல்லக்கூடாது.