கடவுளின் மகிமை
தீருவே! இதோ நான் உனக்கு விரோதமாக வருகிறேன்... அதை வெறும் பாறையாகி அதுவலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும். (எசேக்கியேல் 26: 3-5) என்று ஒரு வசனம் பைபிளில் உள்ளது.பைபிளில் கூறப்படும் ஒவ்வொரு வசனமும் உண்மையே என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த நாடு ஒரு கட்டத்தில் அழிக்கப்பட்டது. எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசி இதை உரைத்தார்.கி.மு.6ம் நூற்றாண்டில், மேற்கு ஆசியாவில் அமைந்திருந்தது தீரு நாடு. இன்றைய லெபனான் நாட்டில் அமைந்துள்ள சீதோன் என்ற நகரில் இருந்து 32 கி.மீ தெற்கே அமைந்துள்ள பழைய காலத்து இடம். ஈராம் என்ற அரசனால் மத்தியதரைக் கடற்கரையில் கட்டப்பட்டது. தீவாக அமைந்துள்ள தீரு பட்டணம் இரட்டை நகராகத் திகழ்ந்தது. பழைய தீருவிலிருந்து 800 மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது. தீவைச் சுற்றிலும் 150 அடி உயர கோட்டைச் சுவர் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்தது. தெற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்த தர்ஷீஸ் என்ற நாடும், தீரும் அன்றைய ஐரோப்பிய நாடுகளில், பலம் வாய்ந்த கப்பற்படைகளை வைத்திருந்ததுடன், உலகம் முழுவதும் வியாபாரமும் செய்து வந்தன. சேர நாட்டின் தொண்டி துறைமுகத்திற்கும், பாண்டிய நாட்டின் கொற்கை துறைமுகத்திற்கும் வந்து மயில் தோகை, தந்தங்கள், வாசனைத்திரவியங்கள், முத்து, தங்கத்தை வாங்கிச் சென்றனர். தீருவின் வியாபாரிகள், தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு எதைக் கேட்டாலும் விற்பனை செய்யும் நிலையில் இருந்தனர். பாபிலோனிய சக்கரவர்த்தி நேபுகாத்நேச்சார், கி மு 585 லிருந்து கி.மு 572 வரை 13 வருடங்கள் முற்றுகை யிட்டும், இந்த இரட்டை நகரங்களில் ஒரு நகரை (பழைய தீரு) மட்டும் அழிக்க முடிந்தது.தீருவின் பாரம், சாத்தானோடு (எசேக்கியல் 28:12-19)ஒப்பிடப்பட்டு தீருவுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. கி.மு 332ல் அசாமிக்ஸ் என்ற அரசன், தன் மகன் சாம்லாவுடன், தீருவை ஆட்சி செய்து வந்தான். உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற பேராசையால், மாசிடோனிய சக்கரவர்த்தியான மகா அலெக்சாண்டர் எகிப்து நாட்டை பிடிக்க விரும்பினான். அந்நாட்டைப் பிடிக்க வேண்டுமானால் தீருவை பிடிக்க வேண்டும் அல்லது தீருவை நட்பு நாடாக்க வேண்டும் என அலெக்சாண்டரின் தளபதியான டாலமி ஆலோசனை கூறினார். அலெக்சாண்டருக்குப் பிறகு, இந்த டாலமி தான் எகிப்தின் அரசன் ஆனார். இவருடைய வம்சத்தில் பிறந்து எகிப்தின் ராணியானவர்தான் உலக அழகி கிளியோபாட்ரா.இளவரசன் சாம்லாவின் ஆணவப் பேச்சால், அலெக்சாண்டர் தீருவை அழிக்க தன் படையினருக்கு உத்தரவிட்டார். அவரது கடற்படை தீருவின் படையோடு ஒப்பிட்டால் மிகச்சிறிய ஒன்று தான். தீருவைப் பிடிக்க ஒரே வழி தரைவழியாக அடைய வேண்டும் என்பது தான். எனவே, மாசிடோனியா நாட்டின் படைவீரர்கள் மன்னனின் உத்தரவுப்படி தீருவிற்கு கடலின் ஊடே பாதை போட ஆரம்பித்தார்கள். கி.மு 332 ல் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட 200 அடி அகலபாதை ஜூலை மாதம் முடிந்தது. பாதை போடுவதற்கு நேபுகாத்நேச்சரால் அழிக்கப்பட்ட பழைய தீருவிலிருந்து செங்கல், கல், மண் மரத்திலான அனைத்து பொருட்களும் பெயர்க்கப்பட்டு கடலில் கொட்டப்பட்டது. அவை பாறைகளாகி மீனவர்கள் மீன் வலையைக் காய வைக்கும் நிலைக்கும் வரும் வரை பொருட்கள் கொட்டப்பட்டன. பின் அசாமிக்சும், அவர் மகன் சாம்லாவும், தீருவின் வீரர்களும் கொல்லப்பட்டனர். தீருவும் அழிக்கப்பட்டது. கி.மு 597 ல் எசேக்கியா கூறின தீர்க்கதரிசனம், 265 வருடங்கள் கழித்து நிறைவேறியது.. இது கடவுளின் மகிமை தானே!