உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்

புறாக்களுக்கும் மற்ற பறவைகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கோழியை அறுத்துப் பார்த்தால், அதனுள் பச்சை நிறத்தில் பித்தப்பை ஒன்று இருக்கும். அதிலுள்ள நீர் கசப்பாக இருக்கும். வாத்தை அறுத்துப் பார்த்தாலும் பித்தநீர் பை இருக்கும். ஆனால், புறாக்களுக்கு மட்டும் பித்தநீர்பை கிடையாது. எனவே கசப்பு என்பது அவற்றிடம் இல்லை.பறவைகளுக்குள் கசப்புள்ளதும், கசப்பில்லாததுமாக இருப்பது போல், மனிதர்களும் பலவகையாய் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோனோர் மனதில் கசப்புணர்ச்சியுடனேயே நடமாடுகிறார்கள்.ஆண்டவர் நமது உள்ளத்திலே வரும்போது அந்த கசப்புணர்வை மாற்றி, தெய்வீக சாந்தத்தைக் கொண்டு வருவார். 'ஆவியின் கனிகளிலே சாந்தமும் ஒன்று' என்கிறது பைபிள்.இப்படி நம் உள்ளத்தில் சாந்தத்தைக் கொண்டு வரும் ஆண்டவருக்கு, நாம் நன்றியறிதல் உள்ளவராக இருக்க வேண்டும். அவரது மென்மையில் பலம் இருக்கிறது. அந்த பலத்தில் மென்மை இருக்கிறது. உள்ளத்தில் நல்ல உள்ளம் சாந்தம் உள்ள உள்ளமே!ஆம்...நம் மனதிலுள்ள கசப்புணர்வை நீக்கி விட்டு, ஆண்டவர் போதித்த சமாதானத்தையும், சாந்த குணத்தையும் ஏற்போம்.