மாற்றும் ஆற்றல் உண்டா...
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
நான் சொல்வது தான் நிஜம். வேண்டுமானால் சத்தியம் செய்யட்டுமா என சிலர் தலையை தொடுவார்கள். தலை என்ன அவ்வளவு மதிப்பில்லாததா...தலையில் முளைத்திருக்கும் முடியில் ஒன்றையாவது கருப்பாக இருப்பதை வெள்ளையாகவும், வெள்ளையாக இருப்பதை கருப்பாகவும் மாற்ற முடியும் ஆற்றல் உங்களுக்கு இருக்குமேயானால் தலையில் அடித்து சத்தியம் செய்யுங்கள். மாற்றம் செய்யக்கூடிய ஆற்றல் ஆண்டவர் ஒருவரிடம் மட்டும் உள்ளது என்பதை மறவாதீர். தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவர் ஒரு போதும் முன்னேறமாட்டார்கள் என்கிறது பைபிள்.