மூத்தோர் சொல் கேள்
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
ஒரு மரத்தில் நிறைய பறவைகள் வசித்தன. அந்த மரத்தில் உள்ள இரண்டு கிளைகளுக்கு இடையே பகை இருந்தது. அவை அடிக்கடி ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும். இதை அங்கு இருந்த வயதான பறவை கவனித்தது. மற்ற பறவைகளிடம் இம்மரத்தில் எப்போது வேண்டுமானாலும் நெருப்பு பற்றும். அதனால் இருப்பிடத்தை மாற்றுவது நல்லது என அறிவுரை கூறியது. அதனோடு சில பறவைகள் மட்டும் வேறு மரத்திற்கு சென்றன. ஆனால் அலட்சியம் செய்த பறவைகள் மரக்கிளை உராய்வினால் தீக்கிரையாயின. மூத்தோர் சொல் கேளுங்கள்.