உள்ளூர் செய்திகள்

நல்ல நல்ல நிலம் பார்த்து...

விதையில் இருந்து பயிர் வளர்ந்து பலன் கொடுப்பதை மூன்று வகையாக சொல்லுவர். முதலில் முளையாகவும், இரண்டாவது கதிராகவும், மூன்றாவதாக தானியம் நிரம்பிய கதிராகவும் வளர்ந்து விளைச்சல் பெறும். * விதை முளையாகவும், கதிராகவும் வளர்ச்சி அடையும் போது அதனால் பயன் இல்லை.* தானியம் நிரம்பிய கதிரே பயிரின் கடைசி நிலை. அதுவே பயனளிக்கும். நல்ல நிலத்தின் அடையாளம் நல்ல பயிரை வளரவிக்கும். அது போல நல்ல பக்குவமான ஆன்மாக்களே பிறருக்கு உதவியாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பத்தில் அனைவரும் வழிவழியாக நல்லவராகவே இருப்பர். இத்தகைய நிலை தான் ஒருவருக்கு வேண்டும் என்கிறது பைபிள்.