உள்ளூர் செய்திகள்

அன்பு நெஞ்சங்களே

அனைவரும் பஸ், ரயிலில் பயணித்திருப்போம். சிலர் அந்த குறிப்பிட்ட மணி நேர பயணத்தில் 'இது எனது இடம், அது உனது இடம்' என்று சண்டையிடுவர். சண்டை ஓய்வதற்குள் அவர்கள் சேருமிடமே வந்து விடும். இதற்கு காரணம் என்ன தெரியுமா? இவர்களது மனதில் அன்பு இல்லை. ஆம்! மனதில் அன்பு இருந்தால் நமது உடைமைகளை கூட விட்டுக்கொடுப்போம். இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால், 'பற்றை' விட வேண்டும். அதாவது மனதில் பற்று இருந்தால் பதட்டம்தான் மிஞ்சும். எனவே 'இது என்னுடையது, அது உன்னுடையது' என்று பிரிவினை பேசாமல் வாழலாமே.