ஆடம்பரம் தேவையில்லையே!
UPDATED : நவ 16, 2021 | ADDED : நவ 16, 2021
வீடுகளில் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் நோக்கம் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பதுதான். ஆனால் தற்போது இவைகள் ஆடம்பரமாக நடக்கின்றன. பலரை அழைப்பது பெருமை. எத்தனை பேர் வந்தார்கள் என்பதிலும் சிலர் பெருமைப்படுவர்.ஆனால் அழைத்த பிறகு வந்தவர்களை கவனிக்க முடிவதில்லை. சொல்லப்போனால் பேசுவதற்கும் நேரம் இல்லை. அழைக்கவில்லை என நினைப்பார்களே என்று அழைக்கிறோம். போகாமல் இருந்தால் 'நல்லா இருக்காது' என்று அழைத்தவர்கள் வருகிறார்கள்.அதற்காக சிலர் கடன் வாங்குகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். நெருங்கியவர்களை அழைத்து அவர்களுடன் அன்பாக பேசி நிகழ்ச்சிகளை கொண்டாடுங்கள்.