உள்ளூர் செய்திகள்

எதுவும் பயனற்றதல்ல...

ஏஞ்சலோ என்பவர் சிறந்த சிற்பி. அவரின் எதிர் வீட்டின் முன் நீளமான கல் கிடப்பதைக் ஒரு நாள் கண்டார். அதுபற்றி அந்த வீட்டாரிடம் கேட்க, இது வீதியில் வருவோருக்கும் போவோருக்கும் இடையூறாக உள்ளது. பணம் எதுவும் வேண்டாம். இந்தக் கல்லை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என்றார். உடனே அக்கல்லை எடுத்து கொண்டு தன் வீட்டிற்கு வந்தார்.சில மாதத்திற்கு பிறகு எதிர் வீட்டுக்காரரை அழைத்தார். அவரிடம் அழகான மாதா சிலையைக் காட்டினார். நீங்கள் இடையூறு என நினைத்த கல்லில் வடித்த சிற்பம் தான் இது. பயனற்றது என ஏதுவும் இல்லை என்றார் சிற்பி. வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பது உண்மை தான் என நினைத்து மகிழ்ந்தார் எதிர்வீட்டுக்காரர்.