உள்ளூர் செய்திகள்

பானை அடிக்கும் நிகழ்ச்சி

இந்துக்கள் கண்ணன் பிறந்தநாளின் போது உறியடி விழா நடத்துவது போல, மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் நாளில் பானைடியடி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பானையின் மீது சாத்தானை வரைந்து, அதனுள் பொம்மைகள், பண்டங்கள் நிரப்பப்படும். அதை உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். மேலும் கீழுமாக அந்த பானையை இறக்க, சிறுவர்கள் அதனை தடியால் அடித்து நொறுக்குவர். உள்ளிருந்து பொம்மை மற்றும் இனிப்புகள் சிந்தும். சிறுவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவர். சாத்தான் நமக்கு நன்மை செய்வது போல கவரப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.