உள்ளூர் செய்திகள்

குறிக்கோளுடன் படியுங்கள்

மாணவர்களே... முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் படியுங்கள். மீண்டும் அதை ஞாபகப்படுத்தி பாருங்கள். சாப்பிடும் உணவை பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என தள்ளி போடுகிறோமா இல்லையே. கல்வியின் அவசியமும் அதைப் போலத்தான். எந்த வேலைகளையும் உடனுக்குடன் செய்து விட்டால் அது எளிமையானது தான். கீழே உள்ள சொல்லை பாருங்கள். NO WHERE இந்த நோ வேர் என்கிற இதனை இப்போது படியுங்கள். NOW HERE நவ் ஹியர் இதுவும் முதலில் இருந்ததைப்போல ஏழு எழுத்துக்கள் தான். ஆனால் சொல்லும் விதமும், அதன் பொருளும் வேறுபடுகிறது. உரிய நேரத்தில் முடிக்கும் வேலை எதுவாயினும் அது உயர்வானதே.