பயணத்தை ரசியுங்கள்
UPDATED : ஜூன் 27, 2022 | ADDED : ஜூன் 27, 2022
உங்களை வழியனுப்ப யாருமே இல்லை. ரயிலில் தனியே பயணம் செய்ய உள்ளீர்கள். அப்போது உங்களது மனநிலை எப்படி இருக்கும். அதுபோல்தான் வாழ்க்கையும். உறவினர்கள், நண்பர்கள் என பலர் இருந்தாலும், உங்களது வாழ்க்கை பயணம் தனியானது. இது புரியாமல் பலரும் அற்ப விஷயத்திற்கு எல்லாம் சண்டையிடுகிறார்கள். யாருக்கு எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே முடியும் என்பது தெரியாது. இதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை பயணத்தை ரசியுங்கள்.