உள்ளூர் செய்திகள்

எங்கும் அமைதி

பலருக்கு கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. இப்படித்தான் சிலர் கோபத்தில், 'நான் இறந்தால்கூட என் முகத்தில் விழிக்காதே' என சொல்லி விடுகின்றனர். இப்படி கோபத்தால் மனிதர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரையும் காயப்படுத்துகின்றனர். பொதுவாக நாம் நினைத்தது நடக்காமல் இருக்கும்போதுதான் கோபம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட முதலில் பிறர் செய்யும் குற்றத்தை மன்னிக்க பழகுங்கள். இதனால் மனச்சுமை குறையும். வெறுப்பு மறையும். ஆண்டவரின் கருணை கிடைக்கும். மனதில் அன்பு இருந்தால் பிறரது குற்றங்கள் பெரிதாகத் தோன்றாது. இப்படி நம் சமுதாயம் மாறினாலே போதும். எங்கும் அமைதி நிலவும்.