உள்ளூர் செய்திகள்

இதுவே மகிழ்ச்சிக்கான வழி..

பலரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடி அலைகின்றனர். அதற்கு என்னென்ன தேவை என்பது அவரவர் மனதை பொறுத்து மாறும். பொதுவாக பணம் இருந்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்பது எல்லோரது எண்ணம். அது உண்மையா என்று கேட்டால்... இல்லவே இல்லை எனலாம். ஒருவர் வறுமையில் வாடுகிறார். திடீரென அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் வேலை கிடைக்கிறது. சில ஆண்டுகளில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். பிறகு அவரது மனம் சும்மா இருக்குமா... 'கார், வீடு வாங்கலாமே' என அடுத்து யோசிக்கிறார். ஒருநாள் அதுவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளில் தனது கனவுகளை அடைகிறார். இருந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது ஏன்... அதுதான் மனத்திருப்தி. என்னடா... மகிழ்ச்சிக்கும் மனத்திருப்திக்கும் சம்பந்தம் உண்டா என யோசிக்காதீர்கள். உண்மையில் ஒருவருக்கு மனதில் திருப்தி ஏற்பட்டுவிட்டால்... அவர் நுாறு ரூபாய் கிடைத்தாலும், நுாறு கோடி கிடைத்தாலும் ஒரே மாதிரியாகத்தான் எண்ணுவார்.