கல்வியின் பயன்
UPDATED : பிப் 22, 2022 | ADDED : பிப் 22, 2022
இந்தக்காலத்தில் தவறு செய்வதற்கு பலரும் பயப்படுவதில்லை. கல்வி கற்காமல் இருப்பதே இதற்கு காரணம். பெரிய குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. இதனால் உலகம் திருந்தி விட்டதா என்ன... மேலும் குற்றங்கள் பெருகத் தான் செய்கின்றன. குற்றத்தைக் கட்டுப்படுத்த கல்வி ஒன்றே சிறந்த வழி. படிக்காமல் ஊர் சுற்றுபவர்களே தவறான செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் ஒருவரை எப்படி பழக்குகிறோமோ அதைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். நல்ல வழிகளில் குழந்தைகளை வழிநடத்துங்கள். வயதான காலத்திலும் அவர்கள் அதை விடமாட்டார்கள்.நல்ல செயல்களை செய்யும்படி துாண்டுவதே கல்வியன் பயனாகும்.