வேண்டும் சுறுசுறுப்பு
UPDATED : நவ 03, 2023 | ADDED : நவ 03, 2023
வெயில் மழை என்று பாராமல் உழைக்க கூடிய உயிரினம் எறும்பு. அதனை சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக சொல்லுவர். சிறுக சிறுக தேவையான பொருட்களை அது சேர்க்கும். அதன் உழைப்பின் மீது அதற்கு அபார நம்பிக்கை உண்டு. மனிதனுக்கு ஞானம் தரும் அளவு எறும்பின் செயல்பாடு உள்ளது. அதைத்தான் '' சோம்பேறிகளே எறும்பைப் பாருங்கள். அதன் செயல்களை கவனித்து ஞானமுள்ளவர் ஆகுங்கள்'' என்கிறது பைபிள்.