உள்ளூர் செய்திகள்

அலைகள் ஓய்வதில்லை

ஆசிரியருடன் மாணவர் இருவரும் கடற்கரையோரம் நடந்து வந்தனர். அவர்களைப் பார்த்து இங்கு என்ன கற்றுக் கொண்டீர்கள் எனக்கேட்டார் ஆசிரியர். அலைகளை பார்த்து விடாமுயற்சி தெரியுது என்றான் ஒருவன். மற்றொருவனோ கரைகளை போல துன்பத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்றான். இருவரையும் பார்த்து சில நேரங்களில் அலைகளாகவும் சில நேரங்களில் கரையாகவும் இருங்கள் என்றார் ஆசிரியர்.