எது அளவு
UPDATED : மே 02, 2023 | ADDED : மே 02, 2023
ஏழை ஒருவர் வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டினார். அப்போது அம்மரத்தின் பொந்தில் பொற்காசுகள் இருப்பதை கண்டார். அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீடு கட்டிய பின்னர், கார் ஒன்றை வாங்கிய அவர் இரண்டு குதிரைகளை வைத்து இழுத்து வந்தார். எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்தனர். 100 குதிரையின் ஆற்றலுக்கு சமம் தான் அவர் வாங்கிய கார் என்பது அவருக்கு தெரியாது. இவரைப்போலத்தான் பலரும் உள்ளனர். உன் உயரத்தின் தரம் அறிந்து குதித்துக்கொள். எட்டியளவே பயிர் செய் என்கிறது பைபிள்.