உள்ளூர் செய்திகள்

சித்தமெல்லாம் சிவமயமே!

சிவராத்திரியான இன்று (பிப். 21) பாடினால் கிரக தோஷம் நீங்கும்.வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனி பாம்பு இரண்டும் உடனேஆசுஅறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்கஎருது ஏறி ஏழை உடனேபொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்உளமே புகுந்த அதனால்ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்,உடனாய நாள்கள் அவை தாம்அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்துஉமையோடும் வெள்ளை விடைமேல் முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால் திருமகள் கலை அது ஊர்தி, செயமாது, பூமி,திசை தெய்வம் ஆன பலவும்,அருநெறி நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.மதி நுதல் மங்கையோடு, வட ஆல் இருந்துமறை ஓதும் எங்கள் பரமன்,நதியொடு கொன்றை மாலை முடிமேல்அணிந்து, என்உளமே புகுந்த அதனால்கொதி உறு காலன், அங்கி, நமனோடு துாதர்கொடுநோய்கள் ஆன பலவும்,அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.நஞ்சு அணிகண்டன், எந்தை, மடவாள் தனோடும்விடை ஏறும், நங்கள் பரமன்,துஞ்சு இருள், வன்னி, கொன்றை முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும் மிகையான பூதம் அவையும்,அஞ்சிடும், நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.வாள் வரி அதள் அது ஆடைவரி கோவணத்தார்மடவாள் தனோடும் உடன்ஆய்,நாள் மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என்உளமே புகுந்த அதனால்,கோள் அரி, உழுவையோடு, கொலையானை கேழல்,கொடு நாகமோடு, கரடி,ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.செப்பு இளமுலை நல்மங்கை ஒரு பாகமாகவிடைஏறு செல்வன் அடைவார்ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்வெப்பொடு, குளிரும் வாதம், மிகையான பித்தும்,வினையாக வந்து நலியா,அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,அடியார் அவர்க்கு மிகவே.வேள்பட விழி செய்து அன்று, விடை மேல் இருந்துமடவாள் தனோடும் உடனாய்,வாள்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து, என்உளமே புகுந்த அதனால்ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்இடர் ஆன வந்து நலியா;ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.பலபல வேடம் ஆகும்பரன், நாரி பாகன்,பசு ஏறும் எங்கள் பரமன்,சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்,மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்வருகாலம் ஆன பலவும்அலைகடல், மேரு நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்குகுணம் ஆய வேட விகிர்தன்,மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்உளமே புகுந்த அதனால்,புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமேஅத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.தேன் அமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல்துன்னி,வளர் செம்பொன் எங்கும் நிகழ,நான்முகன் ஆதி ஆய பிரமா புரத்துமறைஞான ஞான முனிவன்,தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்துநலியாத வண்ணம் உரைசெய்ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்அரசு ஆள்வர், ஆணை நமதே.