சூரியபகவானுக்கு வணக்கம்
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம். திருச்சிற்றம்பலம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே-திருஞானசம்பந்த நாயனார்விண்ணார்ந்த மணிமறுகில் விரவுமொருசகட்டிரத மிசையனாகிப்பண்ணார்ந்த மறைமுனிவர் பாணிதரும் பாணிகொண்டு பதுமம் பாத்துத் தண்ணார்ந்த மதிநிலவு தாழ்சடையெம்புக்கொளிவாழ் சயம்பு ஞானக்கண்ணார்ந்த பேரொளிக் கதிரவனை எதிர்பணிந்து கருத்துள் வைப்பாம். -இளையான் கவிராயர் பயில்பிறவிக் கங்குன் மலப்பட மொழித்துப் பத்தருளப் பதுமம் பூப்பக்கயிலையுறை மருதீசன் கண்ணாகியுதித்தெழு செங்கதிரோன் தன்னை அயில் விழியாள் தனந்திளைத்துக் கேவலத்தின் முழுகுமவர்க்(கு) அகிலம் காணத்துயில் விலக்கி வெயில் விரிக்கும் செம்பரிதிப் புத்தேளைத் தொழுதல் செய்வாம்-மீனாட்சிசுந்தரம்பிள்ளைமாயிரு ஞாலங் கோத்தவல்லிருட்படலம் வாங்கியாயிரம் கரத்தாற் றைவந்தனைத்துயிர்க் கறிவீந் தன்பால்சேயிறு விசும்பும் போற்றும் திருநணாவுடையான் செல்வக்கோயில் வாழி! ரவிப் புத்தேள் குரைகழல் வணக்கம் செய்வாம்-சுதேவ முதலியார் துாக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபறஇன்னமுது உண்டேன் என்று உந்தீபற-வடலுார் ராமலிங்க சுவாமிகள்செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன்எங்கள் அறிவினைத் துாண்டி நடத்துக என்பதோர் நல்லமங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே!சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றிசூரியா! போற்றி சுதந்திரா! போற்றிவீரியா! போற்றி வினைகள் களைவாய்காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்வாசி ஏழுடைய தேர்மேல் மகா கிரிவலமாய் வந்ததேசிகா! என்னை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி-தனிப்பாடல்ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்றதாயே போற்றி!அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!தாயினும் சாலப் பரிந்து சகலரைஅணைப்பாய் போற்றி!தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றிதுாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!ஞாயிறு நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றிநானிலம் உள்ளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!-கண்ணதாசன்