நிம்மதிக்கு...
குடும்பத்தில் நிம்மதி ஏற்பட திருநாவுக்கரசு சுவாமிகளின் போற்றித்திருத்தாண்டகம் படியுங்கள்.கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றிகழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றிஅற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றிஅல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றிமற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றிவானவர்கள் போற்றும் மருந்தே போற்றிசெற்றவர் தம் புரம் எரித்த சிவனேபோற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி.வங்கம்மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றிமதயானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றிகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றிகொல் புலித்தோல் ஆடைக்குழகா போற்றிஅங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றிஆலமர நீழல் அறம் சொன்னாய் போற்றிசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.மலையான் மடந்தை மணாளா போற்றிமழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றிநிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றிநெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றிஇலை ஆர்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றிஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றிசிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.பொன்னியலும் மேனியனே போற்றி போற்றிபூதப்படை உடையாய் போற்றி போற்றிமன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றிமறியேந்து கையானே போற்றி போற்றிஉன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றிஉலகுக்கு ஒருவனே போற்றி போற்றிசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றிநற்றவனே நின் பாதம் போற்றி போற்றிவெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றிவெண்மதி அம் கண்ணி விகிர்தா போற்றிதுஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றிதுாநீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றிசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.சங்கரனே நின்பாதம் போற்றி போற்றிசதாசிவனே நின்பாதம் போற்றி போற்றிபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றிபுண்ணியனே நின்பாதம் போற்றி போற்றிஅங்கமலத்து அயனோடு மாலும் காணாஅனலுருவா நின்பாதம் போற்றி போற்றிசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றிவான் பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றிகொம்பனைய நுண் இடையாள் கூறா போற்றிகுரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றிநம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றிநால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றிசெம்பொனே மரகதமே மணியே போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றிஉகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றிவள்ளலே போற்றி மணாளா போற்றிவானவர் கோன் தோள் துணித்த மைந்தா போற்றிவெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றிமேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றிதெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றிபுத்தேளிர் போற்றும் பொருளே போற்றிதேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றிதிருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றிசாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றிசங்கொத்த நீற்று எம் சதுரா போற்றிசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றிபெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றிகரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றிகாதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றிஅருமந்த தேவர்க்கு அரசே போற்றிஅன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றிதிருமூலட்டானனே போற்றி போற்றி.