உள்ளூர் செய்திகள்

கருட தரிசனம்

* கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனி போல் துன்பம் பறந்தோடும்.* ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும், பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபடுகின்றனர். * கருடனைப் பார்க்கும் போது கன்னத்தில் போட்டுக் கொள்ளக் கூடாது. 'மங்களானி பவந்து' என்று சொல்ல வேண்டும்.* வெளியூர் பயணம் செல்லும் போதும், சுபநிகழ்ச்சி நடத்தும் போதும் கருடன் கண்ணில் படுவது சிறப்பு. * கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட்டால் ஊருக்கே நன்மை உண்டாகும். * கருடனின் நிழல் பட்ட பூமியில் விளைச்சல் அதிகரிக்கும். * 'பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்' என்று பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறியுள்ளார்.